நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய் தரம் தேஜ் சாமி தரிசனம்


நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய் தரம் தேஜ் சாமி தரிசனம்
x

பழனி முருகன் கோவிலில் நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய் தரம் தேஜ் சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் அவ்வப்போது சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமா நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி மற்றும் தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் ஆகியோர் நேற்று கோவையில் இருந்து பழனிக்கு வந்தனர்.

அடிவாரத்தில் இருந்து ரோப்கார் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர். பின்னர் சன்னதிக்கு சென்று அவர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து ரோப்கார் வழியாக மீண்டும் அடிவாரம் வந்து, காரில் சென்னை புறப்பட்டு சென்றனர். முன்னதாக கோவிலுக்கு வந்த நடிகர்களுடன் பொதுமக்கள், பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story