நீர்மோர் அருந்திய நடிகை பார்வதி நாயர்


நீர்மோர் அருந்திய நடிகை பார்வதி நாயர்
x
திருப்பூர்


நத்தக்காடையூர் வழியாக பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லம் பக்தர்களுக்கு ஆங்காங்கே பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நீர், மோர், பானகம், அன்னதானம் வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் திரைப்பட நடிகை பார்வதி நாயர் ஈரோட்டில் இருந்து நத்தக்காடையூர் வழியாக கோவை செல்வதற்கு காரில் வந்தார்.அப்போது நத்தக்காடையூர் தோட்டம் வளைவு பகுதியில் பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் வழங்கப்பட்டதை நேரில் பார்த்து அறிந்து காரை விட்டு கீழே இறங்கி வந்தார். பின்னர் நீர்மோர் வழங்கிய தன்னார்வலர்களிடம் டம்ளரில் நீர் மோர் பெற்று அருந்தினார். பின்னர் நீர் மோர் அருந்திய பிறகு சுவையாக உள்ளது என்று நடிகை பார்வதி நாயர் அங்குள்ளவர்களிடம் கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

நடிகை பார்வதி நாயர் நீர் மோர் அருந்தியதை ரசிகர் ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story