ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் நடிகை நமீதா சாமி தரிசனம்
ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் நடிகை நமீதா சாமி தரிசனம் செய்தார்.
பெத்தநாயக்கன்பாளையம்:
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலையை பக்தர்கள் நாள்தோறும் திரளாக வந்து வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திரைப்பட நடிகையும், பா.ஜனதா பிரமுகருமான நமீதா தனது கணவர் வீரேந்திர சவுத்திரியுடன் முத்து மலை முருகன் கோவிலுக்கு நேற்று இரவு 8 மணி அளவில் வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலையின் முன்பு நின்று வணங்கிய நமீதா, தனது கணவருடன் மூலவர் சன்னதிக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்தார். அங்கு மாலை அணிந்து சாமியின் மேல் வைக்கப்பட்டுள்ள வேலுக்கு குடத்தில் இருந்த பன்னீரை ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஸ்ரீதர் மற்றும் ஹரி ஆகியோர் செய்திருந்தனர்.