பழனி முருகன் கோவிலில் நடிகை வனிதா சாமி தரிசனம்
பழனி முருகன் கோவிலில் நடிகை வனிதா சாமி தரிசனம் செய்தார்.
திண்டுக்கல்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அதேபோல் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களும் சாமி தரிசனத்துக்காக வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று நடிகை வனிதா பழனிக்கு வந்தார். அப்போது அவர் அடிவாரத்தில் இருந்து மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் மீண்டும் மின்இழுவை ரெயில் மூலம் அடிவாரம் வந்த அவர், காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story