நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சுகாதார துறை இணை இயக்குனர் திடீர் ஆய்வு


 நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சுகாதார துறை இணை இயக்குனர் திடீர் ஆய்வு
x

 நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சுகாதார துறை இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை,

 நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சுகாதார துறை இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள கலைஞர் தெருவில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனையில் தினமும 300- க்கும் மேற்பட்ேடார் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு சிகிச்சை, கண் மருத்துவம், எலும்பு முறிவு, உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம், முதல்-அமைச்சர் விரிவான காப்பீடு திட்டம் குறித்து கேட்டறிந்தார். அதன் பிறகு புறநோயாளிகளிடமும், அனைத்து வார்டுகளில் நேரிடையாக சென்று உள்நோயாளிகளிடமும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story