தர்மபுரி மாவட்டத்தில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்


தர்மபுரி மாவட்டத்தில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் மின்வாரிய அலுவலகங்களில் மின் நுகர்வோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

சிறப்பு முகாம்கள்

தமிழகத்தில் மின் நுகர்வோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு மின் நுகர்வோருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தாலும் ஒரே ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பணியை மேற்கொள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் இணையதளம் மூலமாக மின் நுகர்வோர் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து நாட்களும்...

இந்தநிலையில் தர்மபுரி, பாலக்கோடு, அரூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்வாரிய அலுவலகங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு வரிசையில் காத்திருந்து தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.

இந்த சிறப்பு முகாம் வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. பண்டிகை விடுமுறை நாட்களை தவிர்த்து, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story