வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 18,860 பேர் விண்ணப்பம்
திருவாரூர் மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 18,860 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 18,860 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆய்வு கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சமூக சீர்த்திருத்தத்துறை அரசு செயலாளரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான ஆபிரகாம் தலைமை தாங்கினார். கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் 1,178 வாக்குச்சாவடி நிலையங்கள் உள்ளன. மாவட்டத்தில் 5 லட்சத்து 3 ஆயிரத்து 659 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 25 ஆயிரத்து 410 பெண் வாக்காளர்கள், 60 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 10 லட்சத்து 29 ஆயிரத்து 129 வாக்காளர்கள் உள்ளனர்.
பெயர் சேர்க்க 18,860 பேர் விண்ணப்பம்
வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான சிறப்பு சுருக்க திருத்த பணிகளுக்கான முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 18 ஆயிரத்து 860 விண்ணப்பங்கள் பெயர் சேர்த்தலுக்கும், 10 ஆயிரத்து 305 விண்ணப்பங்கள் பெயர் நீக்கலுக்கும், 6 ஆயிரத்து 261 விண்ணப்பங்கள் திருத்த பணிகளுக்கும் என மொத்தம் 35 ஆயிரத்து 426 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பெறப்பட்டவிண்ணப்பங்கள் மீது உரிய ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், உதவி கலெக்டர்கள் சங்கீதா, கீர்த்தனாமணி மற்றும் அனைத்து தாசில்தார்;கள், நகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.