வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆம்பூர் நகராட்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர்
ஆம்பூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கம் 2023 விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது. இதில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் சேர்க்கவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்ய, வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது திருத்தம் செய்வது குறித்த விழிப்புணர்வு பொது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆம்பூர் நகராட்சி ஆணையர் ஷகிலா, தாசில்தார் மகாலட்சுமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story