செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதலாக 250 கன அடி நீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளதால் கூடுதலாக 250 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.
சென்னை,
சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி பரந்து விரிந்து 6,300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் மொத்தமாக 3,645 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை மற்றும் நீர்வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டிய உள்ளது.
அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 அடியாக உள்ள நிலையில், நேற்று 23. 36 அடியாக இருந்தது.
ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், ஏரியில் இருந்து நேற்று மதியம் 12 மணிக்கு 500 கனஅடி உபரிநீர் திறக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முதற்கட்டமாக ஏரியில் இருந்து 250 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று பெய்த கனமழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகாமானதால் ஏரியில் இருந்து இரண்டாம் கட்டமாக கூடுதலாக இன்று காலை 9 மணிக்கு 250 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் அடையாறு ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.