4 ரெயில்களில் கூடுதலாக குளிர்சாதன வசதி பெட்டிகள் இணைப்பு
4 ரெயில்களில் கூடுதலாக குளிர்சாதன வசதி பெட்டிகள் இணைப்பு
திருப்பூர்
திருவனந்தபுரம்-மும்பை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (எண்.16332) வருகிற 17-ந் தேதி முதல் 3 அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி இரண்டு நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இதுபோல் மும்பை-திருவனந்தபுரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (எண்.16331) வருகிற 18-ந் தேதி முதல் 3 அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி இரண்டு நிரந்தரமாக இணைக்கப்படுகிறது.
மேலும் கன்னியாகுமரி-புனே செல்லும் தினசரி ரெயிலில் (எண்.16382) 3 அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி 2 வருகிற 22-ந் தேதி முதல் நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. அதுபோல் புனே-கன்னியாகுமரி செல்லும் தினசரி ரெயிலில் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டி 2 வருகிற 23-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது. இந்த ரெயில்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.