4 ரெயில்களில் கூடுதலாக ஒரு பெட்டி இணைப்பு


4 ரெயில்களில் கூடுதலாக ஒரு பெட்டி இணைப்பு
x

4 ரெயில்களில் கூடுதலாக ஒரு பெட்டி இணைப்பு

திருப்பூர்

திருப்பூர்

யஸ்வந்பூர்-கொச்சுவேலி வாராந்திர ரெயில் (எண்.22677) சேலம் ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் இன்று (வியாழக்கிழமை) முதல் மூன்றடுக்கு படுக்கை வசதி, குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.

கொச்சுவேலி-யஸ்வந்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.22678) கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மூன்றடுக்கு படுக்கை வசதி, குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது.

வாஸ்கொடகாமா-நாகப்பட்டினம் வாராந்திர ரெயில் (எண்.17315) சேலம், ஈரோடு, கரூர் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் வருகிற 4-ந் தேதி முதல் படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இதுபோல் நாகப்பட்டினம்-வாஸ்கொடகாமா வாராந்திர ரெயில் (எண்.17316) கரூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி நிரந்தரமாக வருகிற 6-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.

இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

----

Reporter : M.Sivaraj_Staff Reporter Location : Tirupur - Tirupur


Next Story