மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்
முண்டியம்பாக்கம் டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததால் விற்பனையாளருடன் மதுபிரியர்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்
விக்கிரவாண்டி:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசே மதுவை விற்பனை செய்கிறது. சில டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி. விலையை விட ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல் செய்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலானது. ஆனால் இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் முண்டியம்பாக்கத்தில் சர்க்கரை ஆலை அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாயை விற்பனையாளர் வசூலித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதை ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த காட்சி தற்போது வைரலாகிறது.
Related Tags :
Next Story