கிரஷரில் மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி
பிரம்மதேசம் அருகே கிரஷரில் மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலியானாா்.
விழுப்புரம்
பிரம்மதேசம்:
பிரம்மதேசம் அருகே உள்ள கீழ் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சரவணன்(வயது 33). இவர் சேனலூரில் உள்ள தனியார் கிரஷரில் டிப்பர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று டிப்பர் லாரியில் பார் மண் ஏற்றி, இறக்கும்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் உள்ள மின் வயரில் டிப்பர் லாரி உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் சரவணன் தூக்கி வீசப்பட்டார். இவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சரவணனின் மனைவி மீனா கொடுத்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story