ரூ.17 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்


ரூ.17 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்
x

வாணியம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.17 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறக்கப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி நகராட்சி 36-வது வார்டு நேதாஜி நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு வாணியம்பாடி தொகுதி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து பள்ளிக்கு தரைத்தள நீர்த்தொட்டி கட்டுவதற்கு தனது சொந்த பணம் ரூ.30 ஆயிரத்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார், பொறியாளர் சங்கர், நகரமன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜஹீர்அஹமத், நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story