பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு


பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறக்கப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

ஆழ்வார்திருநகரி ஒன்றியம் அம்பலச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

ஆழ்வார்திருநதரி ஒன்றியக்குழுத் தலைவர் ஜனகர் தலைமை தாங்கினார். கட்டாரிமங்கலம் ஊராட்சி தலைவர் கீதாகணேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயகிருபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா வரவேற்றார். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, புதிய பள்ளி வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதில் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி தலைவர் பெரியசாமி ஸ்ரீதர், கருங்கடல் ஊராட்சி தலைவர் நல்லத்தம்பி, உடையார்குளம் ஊராட்சி தலைவர் தேவராஜ், ஊராட்சி துணைத் தலைவர் கிறிஸ்டோபர், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், நெடுஞ்சாலைத்துறை நுகர்வோர் குழு உறுப்பினர் ஹை.போனிபாஸ், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் கோதாண்டராமன், புங்கன், டாக்டர் ரமேஷ்பிரபு, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் லிங்கப்பாண்டி, ஜோசப் அலெக்ஸ், மற்றும் வடிவேல், சிவபெருமாள், பாலகுமரேசன், செல்வி, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஒப்பந்தகாரர் கணேசன் நன்றி கூறினார்.

முன்னதாக மீரான்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலவசவப்பனேரியைச் சேர்ந்த தொழிலாளி சுடலைக்கண் என்பவர் மகள் முருகேஸ்வரி (7), பாம்பு கடித்ததில் கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது வீட்டுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ. 10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். அவரது மூத்த மகள் படிப்பு செலவை ஏற்பதாக தெரிவித்தார்.



Next Story