மதுரை வழியாக இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு


மதுரை வழியாக இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
x

மதுரை வழியாக இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

மதுரை


பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.16127/16128) ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, ஒரு பொதுப்பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டிகள் இரு மார்க்கங்களிலும் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரெயிலில் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 7 பொதுப்பெட்டிகள், ஒரு 2-ம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ரெயிலில் 3 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. அந்த பெட்டிகள் டி-1,2,3 என முன்பதிவு பெட்டிகளாக உள்ளன. ஆனால் தற்போதைய மாற்றத்தின் படி, 3 முன்பதிவு இருக்கை பெட்டிகளும் பொதுப்பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளனவா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஏற்கனவே, ரெயில் பயணிகளின் புகார் செயலியான "ரெயில் மதாத் செயலியில்" இந்த 3 முன்பதிவு இருக்கை பெட்டிகளிலும் முன்பதிவு செய்யாத சாதாரண டிக்கெட் பயணிகள் ஏறுவதால் முன்பதிவு செய்த பயணிகளுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவதாக தினமும் புகார்கள் வந்தவண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெரும்பாலான நேரங்களில் இந்த பெட்டிகளில் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்ய செல்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story