பேராவூரணி தாலுகா அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் ஆய்வு


பேராவூரணி தாலுகா அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் ஆய்வு
x

பேராவூரணி தாலுகா அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்

பேராவூரணி;

ேபராவூரணி தாசில்தார் அலுவலகத்தில், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா ஆய்வு மேற்கொண்டார். வருவாய்த்துறை சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நிலுவையில் உள்ள மனுக்கள், மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார்.பின்னர் சமத்துவ பொங்கல் விழாவில் வருவாய்த் துறையினருக்கு நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற துணை தாசில்தார்கள்,, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அலுவலக பணியாளர் உள்ளிட்ட பல்வேறு நிலை அலுவலர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுக் கோப்பைகள், புத்தகங்களை வழங்கினார்.முன்னதாக தாசில்தார் சுகுமார் வரவேற்றார். முடிவில் வட்ட சார் ஆய்வாளர் சந்தோஷ் நன்றி கூறினார். தொடர்ந்து தாசில்தார் அலுவலக வளாகத்தில் மா, பலா, வாழை என முக்கனிகளின் செடிகளை கூடுதல் கலெக்டர் நட்டு வைத்தார்.


Next Story