வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
சேலம்
தாரமங்கலம்:
தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மாவட்ட கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஊராட்சி பகுதியில் நடைபெறும் திட்ட பணிகளான குறுக்குப்பட்டி ஊராட்சி மன்ற கட்டிடம், பவளத்தனூர், பாப்பாம்பாடி, கரட்டூர், வணிச்சம்பட்டி ஆகிய பகுதியில் பள்ளி கட்டிட பணிகளையும், சின்னப்பம்பட்டி, செங்கோடனூர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானங்கள், பாப்பாம்பாடி தச்சங்காட்டூர் பகுதியில் இலங்கை தமிழர் குடியிருப்புகள், ஆரூர்பட்டி பகுதியில் நரிக்குறவர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகள் உள்ளிட்டவற்றை கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய உதவி பொறியாளர்கள் சீனிவாசன், கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story