பெரணமல்லூர் ஒன்றியத்தில் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு


பெரணமல்லூர் ஒன்றியத்தில்  திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
x

பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றியத்தில் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றியத்தில் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், ஆய்வு மேற்கொண்டார். பெரியகொழப்பலூர் கிராமத்திலிருந்து விநாயகபுரம் செல்லும் செயாற்று படுகையில் நபார்டு வங்கி மூலம் ரூ.8 கோடியே 47 லட்சத்தில் உயர் மட்ட மேம்பாலம் கட்ட தொடங்க உள்ள திட்டப்பணி, பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நெடுங்குணம், கிராமத்தில் இருந்து தச்சம்பட்டு கிராமம் வரை ரூ.64 லட்சம் மதிப்பில் நடைபெற்று முடிந்த சாலை திட்டப் பணி, பெரணம்பாக்கம் கிராமத்தில் ரூ.12.64 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அங்கன்வாடி மைய கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை பராமரிப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் 2 வகுப்பறைகள் புதுப்பிக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இதேபோல் அனாதிமங்கலம், கிராமத்தில் சத்துணவு கூடம் புதுப்பித்தல் பணி, அறியப்பாடி கிராமத்தில் இருளர் 8 இருளர் இன குடும்பங்களுக்கு பசுமை வீடு திட்டப் பணிகள், நகரந்தல், கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அவர் நேரில் சென்று ஆய்வு செய்து திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகனசுந்தரம், வெங்கடேசன், ஒன்றிய பொறியாளர்கள் குருபிரசாத், தியாகு உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story