வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணியை கூடுதல் ஆணையாளர் ஆய்வு
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணியை கூடுதல் ஆணையாளர் ஆய்வு
சிவகங்கை
மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளராக நில சீர்திருத்த கூடுதல் ஆணையர் சாந்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி அவர் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த பணிகளை ஆய்வு செய்ய சிவகங்கை வந்தார். பின்னர் அவர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர்பதிவு அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், தேர்தல் தனித்துணை தாசில்தார்கள் ஆகியோர்களுடன்ஆய்வு நடத்தினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story