அரசு ஆஸ்பத்திரியில் இரவு நேரத்தில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும்


அரசு ஆஸ்பத்திரியில் இரவு நேரத்தில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:45 PM GMT)

நாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு இரவு நேரத்தில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு இரவு நேரத்தில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டவர் ஆஸ்பத்திரி

நாகையை அடுத்த நாகூரில் உலக பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நாகூரில் நாகூர் ஆண்டவர் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.

இந்த அரசு ஆஸ்பத்திரியை உள்ளூர் பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். காலை, மாலை என இரு வேளைகளில் டாக்டர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வருகின்றனர். ஆனால் இரவு நேரங்களில் போதுமான டாக்டர்கள் இல்லை.

இரவு நேரத்தில் டாக்டர்கள் இல்லை

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சில சமயங்களில் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு சென்றால் டாக்டர்கள் இல்லை என்று கூறுகின்றனர். இதனால் அவசர சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்றால் நாகைக்கு தான் செல்ல வேண்டும். எனவே பொது மக்கள் நலன் கருதி நாகூர் ஆண்டவர் அரசு ஆஸ்பத்திரிக்கு இரவு நேரங்களில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவதிப்பட்டேன்

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த அறமுரசு அப்துல்காதர் கூறியதாவது:-

நான் 5 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் எனது உடலில் சோர்வு ஏற்பட்டது. உடனே உடலை பரிசோதிப்பதற்காக ஆண்டவர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அப்போது, இரவு நேர பணியில் டாக்டர்கள் இல்லை என்றனர். உடனே நான் திரும்பி சென்று விட்டேன்.

இதனால் அன்று இரவு நான் மிகவும் அவதிப்பட்டேன். இரவு நேரத்தில் ஒரு அவசர உதவிக்கு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாதது மிகுந்த வேதனையாக உள்ளது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

நடவடிக்கை

ஆனால் இன்று வரை ஆஸ்பத்திரியில் இரவு நேர பணியில் டாக்டர்களை பணி அமர்த்தவில்லை.

எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாகூர் ஆண்டவர் அரசு ஆஸ்பத்திரியில் இரவு நேரங்களில் போதுமான டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story