வளப்பாற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும்


வளப்பாற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும்
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கருகும் சம்பா நெற்பயிரை காப்பாற்ற வளப்பாற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

நன்னிலம்:

கருகும் சம்பா நெற்பயிரை காப்பாற்ற வளப்பாற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பா சாகுபடி

நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு நேரடி விதைப்பு மூலமாகவே சாகுபடி செய்து வருகின்றனர். மேட்டூர் அணை முன்கூட்டியே திறந்த போதிலும் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடி செய்த நெற்பயிர் நீரின்றி கருகிவிட்டது.

எனவே நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு போதுமான தண்ணீர் இன்றி கருகிய நிலையில் விவசாயிகள் மீண்டும் நிலத்தை உழுதுவிட்டு சம்பா நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர்.

கருகும் நிலை...

பலருக்கு நீரின்றி முளைக்காமலே உள்ளது. சிலருக்கு முளைத்து கருகும் நிலையில் உள்ளது. கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற உடனடியாக வளப்பாற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும்.

போதுமான தண்ணீரை திறந்து விட்டால் மட்டுமே சம்பா பயிர்களை காப்பாற்ற முடியும் என வளப்பாறு மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story