உறைகிணற்றின் கூடுதல் அடுக்குகள் வெளிவந்தன


உறைகிணற்றின் கூடுதல் அடுக்குகள் வெளிவந்தன
x

8-ம் கட்ட அகழாய்வு காரணமாக கீழடியில் கூடுதல் அடுக்குகளுடன் உறை கிணறு தென்பட்டது.

சிவகங்கை

திருப்புவனம்,

நாகரிகத்தில் தமிழர்கள்தான் முன்னோடி என்பதை நிரூபிக்கும் வண்ணம் கீழடியில் தொடர்ந்து பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது 8-ம் கட்ட அகழாய்வு பணி நடக்கிறது.

கீழடி மட்டுமின்றி அருகே உள்ள கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வு நடைபெறுகிறது. கீழடியில் இதுவரை 10 குழிகள் வரை தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் மேற்கொண்டதில் கண்ணாடி பாசிமணிகள், கண்ணாடி வளையல்கள், சுடுமண்மணிகள், காதணிகள், சங்கு வளையல்கள், யானை தந்ததால் செய்யப்பட்ட பகடைக்காய் உள்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஒரு குழியில் ஆழமாக தோண்டி அகழாய்வு மேற்கொண்டதில் சுடுமண் உறைகிணறு தென்பட்டது. மிகவும் நேர்த்தியாகவும், வட்ட வடிவமாகவும் அந்த உறைகிணறு அழகாக இருந்தது. தொடர்ந்து தோண்டியபோது உறைகிணற்றில் 5 சுடுமண் அடுக்குகள் வரை தெரியவந்தது.

தற்போது மேலும் ஆழமாக தோண்டிய போது மேலும் கூடுதலாக இரு அடுக்குகள் தெரிய வந்துள்ளன. தற்சமயம் 7 அடுக்கு கொண்ட சுடுமண் உறைகிணறு தெரிகிறது. இன்னும் தோண்டும்போது கூடுதலாக அடுக்குகள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Related Tags :
Next Story