கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமிக்க கோரிக்கை


கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமிக்க கோரிக்கை
x

கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமிக்க கோரிக்கை

திருப்பூர்

பல்லடம்

பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. மேலும் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை உள்ளதால் போக்குவரத்தை சீர் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பல்லடத்தில் பனப்பாளையம் ேசாதனை சாவடி, நால்ரோடு, பஸ் நிலையம், மாணிக்காபுரம் பிரிவு, செட்டிபாளையம் பிரிவு ஆகிய இடங்களில் அதிக போக்குவரத்து உள்ளதால் அங்கு போலீசார் இருக்க வேண்டும். இதுதவிர மங்கலம் ரோடு, என்.ஜி.ஆர்., ரோடு, கொசவம்பாளையம் பிரிவு ஆகிய இடங்களிலும் போக்குவரத்து போலீசார் தேவைபடுகிறது. இந்தநிலையில் பல்லடம் போக்குவரத்து போலீசில் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால், சட்டம்-ஒழுங்கு போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில்ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். போக்குவரத்து போலீசாரும் உரிய விடுமுறை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே உடனடியாக பல்லடம் போக்குவரத்து போலீசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி போக்குவரத்தை சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

----


Next Story