ெரயில்வே பாலம் அமைப்பது குறித்து அரசு கூடுதல் செயலாளர் ஆய்வு


ெரயில்வே பாலம் அமைப்பது குறித்து அரசு கூடுதல் செயலாளர் ஆய்வு
x

வாணியம்பாடி நியூ டவுன் ெரயில்வே கேட் பகுதியில் ெரயில்வே பாலம் அமைப்பது குறித்து அரசு கூடுதல் செயலாளர் தென்காசி ஜவகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி நியூ டவுன் ெரயில்வே கேட் பகுதியில் ெரயில்வே பாலம் அமைப்பது குறித்து அரசு கூடுதல் செயலாளர் தென்காசி ஜவகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரெயில்வே பாலம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ெரயில்வே பாதையை (எல்.சி.81) கடந்து செல்வதற்காக ரெயில்வே பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நீண்ட காலமாக தீர்க்கப்படாத உள்ள பிரச்சினைகள் குறித்து 10 முக்கிய கோரிக்கைகளை அளிக்க கோரி கேட்டிருந்தார்.

அதன்படி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா மூலம் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நியூடவுன் ெரயில்வே கேட் பகுதியில் பாலம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து இருந்தார்.

அரசு கூடுதல் செயலாளர் ஆய்வு

அதன் அடிப்படையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை) தென்காசி எஸ்.ஜவகர் நேற்று திடீரென நியூடவுன் ெரயில்வே பாலம் அமைக்கப்பட உள்ள இடத்தையும், அங்கு கால்வாய் நீர் செல்ல உள்ள இடத்தையும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் நடைபெறும் பள்ளிகளை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டார்.

அங்கு மாணவ மாணவிகளிடம் காலை உணவு வழங்கப்படுவது எவ்வாறு உள்ளது என கேட்டறிந்தார்.

கூடுதல் வகுப்பறைகள்

தொடர்ந்து, நியூடவுன்- காந்தி நகர் அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1.8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 12 கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி எஸ்.ஜவகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் முரளி, நகராட்சி ஆணையர் மாரிசெல்வி, நகராட்சி என்ஜினியர் பி.சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story