ரூ.1.80 லட்சம் மதிப்பில் கூடுதல் தெரு விளக்குகள்


ரூ.1.80 லட்சம் மதிப்பில் கூடுதல் தெரு விளக்குகள்
x

மன்னார்புரத்தில் ரூ.1.80 லட்சம் மதிப்பில் கூடுதல் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டது

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் சங்கனாங்குளம் ஊராட்சி மன்னார்புரம் கிராமத்தில் ஊராட்சி நிதியிலிருந்து ரூ.1.80 லட்சம் மதிப்பில் 24 கூடுதல் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு, அதன் தொடக்க விழா நடைபெற்றது. சங்கனாங்குளம் பஞ்சாயத்து தலைவர் எஸ்.சின்னதம்பி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் மை.ரா.அகஸ்டின் கீதராஜ் முன்னிலை வகித்தார். மன்னார்புரம் பங்குத்தந்தை எட்வர்ட் புதிய தெருவிளக்குகளை இயக்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் இட்டமொழி இளநிலை பொறியாளர் ஸ்டாலின் ஜெபராஜ், மின்கம்பி ஆய்வாளர் அக்னிராஜ், போர்மேன் ஆரோக்கியராஜ் பெர்னான்டோ, வணிக ஆய்வாளர் பேச்சிமுத்து, வார்டு உறுப்பினர்கள் ஜோதி ஆல்ட்ரின், மெர்லின்மேரி ஜெபஸ்டின், ஊர் பிரமுகர்கள் சேவியர் மான்சிங், மைக்கேல் ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story