உடன்குடி தேரியூரில் ரூ.4.22 கோடியில் கூடுதல் துணை மின் நிலையம்
உடன்குடி தேரியூரில் ரூ.4.22 கோடியில் கூடுதல் துணை மின் நிலையத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.
உடன்குடி:
உடன்குடி தேரியூரில் ரூ.4.22 கோடியில் கூடுதல் துணை மின் நிலையத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.
கூடுதல் துணை மின் நிலையம்
உடன்குடி தேரியூர் துணைமின்நிலைய வளாகத்தில் ரூ.4.22 கோடி மதிப்பீட்டில் கூடுதல் துணை மின் நிைலய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் தலைமை தாங்கினார். செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், மின்சார மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், செயற்பொறியாளர் ரெமோனா, திருச்செந்தூர் செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன், உடன்குடி உதவி செயற்பொறியாளர் ராம்மோகன், உடன்குடி பேரூராட்சிதுணைத்தலைவர் சந்தைடியூர் மால்ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
விழாவில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கூடுதல் துணை மின் நிலையத்துக்கான அடிக்கல்லை நாட்டி பேசினார்.
அவர் பேசுகையில், இத்திட்டத்தின் மூலம் துணை மின்நிலையத்திலிருநந்து செல்லும் மின்பாதைகள் பிரிக்கப்பட்டு புதிய விநியோக மின்மாற்றிகளுடன் புயல், வெள்ளம் உள்ளிடட இயற்கை இடற்பாடுகளை தாங்கி நிற்கும் வகையில் புதிய மின்வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டம் முழுமை அடைந்து உடன்குடி துணைமின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் தொடங்கும் போது வீடுகளுக்குத் தனியாகவும், விவசாய மின்மோட்டார்களுக்குத் தனியாகவும் மின்விநியோகம் செய்ய முடியும். இதன் மூலம் செட்டியாபத்து, வாத்தியார்குடியிருப்பு தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, குருநாதபுரம், சீருடையார்புரம் கிராமங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 300 பயனாளிகளும், 760விவசாயிகளும் பயனடைவர்' என்றார். இவ்விழாவில் மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர்கள் முத்துகிருஷ்ணன், ஜெயக்குமார், ரவீந்்திரகுமார், முத்துகணேசன், வேலாயுதம், உதவி பொறியாளர்கள் மகாலிங்கம், ராஜேஷ், வேலாயுதம், இம்மானுவேல், நிர்வாக அலுவலர் கலைக்கண்ணன், திருச்செந்துர் நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ், ஆவின் தலைவர் சுரேஷ், தி.மு.க. மாவட்ட மகளிரணி ஜெஸிபொன்ராணி, இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க.வினர்
திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில்
சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை புதுகிணறு அ.தி.மு.க. கிளை செயலாளர் மாசிலாமணி தலைமையில், ஒன்றிய பிரதிநிதி முத்து கண்ணன் மற்றும் 10 பெண்கள் உள்பட மொத்தம் 33 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், பொன்முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.