ரூ.1¾ கோடியில் கூடுதல் மின்மாற்றி
ரூ.1¾ கோடியில் கூடுதல் மின்மாற்றி அமைக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே மேமாத்தூரில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கு ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 8 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் திறன் மின்மாற்றியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி துணை மின் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நாகை மின்வாரிய பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் சசிதரன் தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.பி., நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூடுதல் திறன் கொண்ட மின் மாற்றியை இயக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், சீர்காழி கோட்ட மின் பொறியாளர் லதா மகேஸ்வரி, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், காவிரி டெல்டா பாசனக்காரர் முன்னேற்ற சங்க ஒருங்கிணைப்பாளர் குருகோபி கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.