ரூ.3¾ கோடியில் கூடுதல் மின்மாற்றிகள்
ரூ.3¾ கோடியில் கூடுதல் மின்மாற்றிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் காட்பாடி தாலுகா கார்ணாம்பட்டு ஊராட்சியில் உள்ள துணை மின் நிலையத்தில் தரமான, தடையற்ற மின்சாரம் வழங்கும் வகையில் ரூ.2.59 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கார்ணாம்பட்டு துணை மின் நிலையத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றினார்.
நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர் மொழியரசு, காட்பாடி செயற்பொறியாளர் பரிமளா, செயற்பொறியாளர் சாந்தி, காட்பாடி ஒன்றியக் குழுத்தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோன்று பேரணாம்பட்டு துணை மின் நிலையத்தில் ரூ.1¼ கோடியில் அமைக்கப்பட்டுள்ள மின் மாற்றியையும் திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து பேரணாம்பட்டு துணை மின் நிலையத்தில் அமலு விஜயன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் பேரணாம்பட்டு நகராட்சி தலைவர் பிரேமா, துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர் அஹம்மத், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பொகளூர் ஜனார்த்தனன், டேவிட், திருப்பத்தூர் செயற்பொறியாளர் சம்பத், உதவி செயற்பொறியாளர்கள் குடியாத்தம் சீனிவாசன், பரவக்கல் கலைச்செல்வன், பேரணாம்பட்டு பெருமாள், உதவி பொறியாளர்கள் ரகுநந்தன், தனகோட்டி, சரஸ்வதி, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.