கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தம்


கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தம்
x

அனுப்பன்குளம் துணை மின்நிலையத்தில் கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தப்பட்டன.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசியில் போதிய மின்சாரம் இல்லாமல் தொழில்கள் வளர்ச்சி இன்றி காணப்பட்டது. இதையடுத்து பல்வேறு இடங்களில் இருந்த மின்வினியோக பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. விஸ்வநத்தம், நாரணாபுரம் பகுதியில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைக்க அசோகன் எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்தார்.

இந்தநிலையில் சிவகாசி நகர பகுதியில் ஏற்பட்டு வரும் மின்சார தட்டுப்பாடுகளை சரி செய்ய கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் வேண்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து தற்போது அனுப்பன்குளம் துணை மின்நிலையத்துக்கு புதிய டிரான்ஸ்பார்மர்களை அரசு வழங்கி உள்ளது. இதனை பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனை அசோகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து டிரான்ஸ்பார்மர்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மின்வாரிய அதிகாரி பாவநாசத்திடம் அவர் வலியுறுத்தினார்.


Next Story