பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்


பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 3:26 PM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறு பகுதிக்கு பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவு பொதுச்செயலாளர் கோரிக்கை

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு, காடந்சேத்தி, ஆய்மூர், வண்டல், ஆலங்குடி, மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து கடந்த மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்ட காவேரி நீர் கடைமடை பகுதியான தலைஞாயிறு பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்தநிலையில் விவசாயிகள் வயல்களை உழுது, உரமிட்டு தயார் செய்து நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ள வயல்களில் விதைகளை முளைக்க வைப்பதற்காக வயல்களில் தண்ணீர் வைக்கும் பணியும் நடைபெறுகிறது. இந்தநிலையில் தற்போது வரும் தண்ணீர் குறுவை சாகுபடிக்கு போதுமானதாக இல்லை. கடைமடை பாசன பகுதியான தலைஞாயிறு பகுதிக்கு முறை வைக்காமல் ஒரு வார காலத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜீத்சங்கர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story