அரசு ஆஸ்பத்திரிக்கு போதிய டாக்டர்கள் நியமிக்க வேண்டும்
குடவாசல் அரசு ஆஸ்பத்திரிக்கு போதிய டாக்டர்கள் நியமிக்க வேண்டும்
திருவாரூர்
குடவாசல்:
குடவாசல் அரசு தலைமை ஆஸ்பத்திரியை நேரில் சென்று பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த காலங்களில் இந்த ஆஸ்பத்திரியில் 5 டாக்டர்கள் பணியாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த போராட்டம் மூலம் இரவு நேரத்தில் பணியாற்ற டாக்டரை நியமித்தனர். ஆனால் தற்போது 3 டாக்டர்கள் மட்டும் பணியாற்றி வருகிறார்கள். மதியம் 12 மணிக்கு மேல் முதலுதவி செய்ய கூட டாக்டர்கள் இல்லை. இதனால் நோயாளிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். குடவாசல் தாலுகா ஆஸ்பத்திரியாக இருப்பதால், இந்த ஆஸ்பத்திரிக்கு போதிய டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நியமிக்க வேண்டும் என்றார். அப்போது நகர செயலாளர் சேகர் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story