ஆதிச்சநல்லூர்சைட் மியூசியத்தை கண்டுகளித்த மலேசியா மாணவர்கள்
ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை மலேசியா மாணவர்கள் கண்டுகளித்தனர்.
ஸ்ரீவைகுண்டம்:
ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தை தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மலேசியா சுலுத்தான் இது ரீசு கல்வியியல் பல்கலைக்கழகத்திலிருந்து தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கிற்கு வந்திருந்த 42 மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் இந்த மியூசியத்திற்கு வந்தனர். இவர்களுக்கு இணைப்பேராசிரியை ்மனோன்மணிதேவி, முத்து, ஆறு அண்ணாமலை, ஏ.பி.சி மகாலெட்சுமி கல்லூரி முதல்வர் க. சுப்புலெட்சுமி ஆகியோர் வழி காட்டினர். இவர்கள் சைட்மியூசியத்தினை பார்வையிட்டனர். அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த மனித எலும்பு, இரும்பு, மண்பாண்டம், தங்கம் உள்பட அகழாய்வில் கிடைத்த பொருள்களை அவர்கள் கண்டுகளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொல்லியல் கழக தலைவர் சுதாகர், பாளையாங்கோட்டை ஜான்ஸ் கல்லூரிவரலாற்றுதுறை பேராசிரியர் ஜோசப்ராஜ், வ.உ.சி கல்லூரி தமிழத்துறை இணைபேராசிரியை கிருஷ்ணவேணி, தமிழத்துறை உதவி பேராசிரியர் பாபு, ஏ.பி.சி. மகாலெட்சுமி மகளிர் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசியை புஷ்பக வல்லி உள்பட பலரும் உடன் வந்திருந்து ைசட் மியூசியத்தை பார்வையிட்டனர்.