ஆதி பிராமணி பொடிப்பிள்ளை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஆறுமுகநேரி பூவரசூர் ஆதி பிராமணி பொடிப்பிள்ளை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பூவரசூர் ஆதிபிராமணி பொடிப்பிள்ளை அம்மன் மற்றும் இளங்கத்தம்மன் கோவில் கும்பாபிஷேகவிழா 3 நாட்கள் நடைபெற்றது.
முதல் நாளில் விநாயகர் பூஜை, மகா கணபதி ஹோமம், விக்னேஸ்வரர் பூஜை, சிறப்பு திபாரதனை, முதலாம் யாகசாலை பூஜை நடைபெற்றது. இரண்டாம் நாள் காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், வேத திருமுறை சமர்ப்பித்தலும் நடைபெற்றது. அன்று மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜை, எந்திர ஸ்தானமும் நடந்தது. தொடர்ந்து அஷ்டபந்தனம் மருந்து சாத்துதலும்,
மூன்றாம் நாளான நேற்று காலையில் நான்காம் கால யாக சாலை பூஜையும், காலை 9.45. மணிக்கு ஆதிபிராமணி பொடிப் பிள்ளையம்மன் மற்றும் இலங்கத்தம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா அபிஷேகமும் மற்றும் தீபாரதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.