ராணிப்பேட்டையில் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்


ராணிப்பேட்டையில் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்
x

ராணிப்பேட்டை ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் விழிக்கண்காணிப்பு குழுக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

உறுப்பினர்:- காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்குகளில் வன்கொடுமை பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு கிடைக்கவில்லை.

கலெக்டர்:- இந்த விசாரணை முறையாக இருந்தாலும் உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும்.

உறுப்பினர்:- நிலுவையில் உள்ள வன்கொடுமை பாதிப்பு குறித்த வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும்.

போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி:- நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினர்:- அரக்கோணம் பெருங்களத்தூர் ஊராட்சியில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த தொடக்கப்பள்ளி வகுப்புகள் மாற்றப்பட்டு தற்போது பள்ளி வகுப்பறையில் நடைபெற்று வருகிறது. இதை நலக்குழு வரவேற்கிறது. ஆதிதிராவிடர் மக்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டும், வீடு கட்ட இதுவரையில் பட்டா மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.

கலெக்டர்:- நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட ஆதிராவிட நல அலுவலர் பூங்கொடி, வருவாய் கோட்டாட்சியர்கள் வினோத்குமார், பாத்திமா மற்றும் நலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story