பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடங்க மானியம் பெற ஆதிதிராவிட மகளிர் விண்ணப்பிக்கலாம்


பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடங்க மானியம் பெற ஆதிதிராவிட மகளிர் விண்ணப்பிக்கலாம்
x

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடங்க மானியம் பெற ஆதிதிராவிட மகளிர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தில் ஆதிதிராவிட மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடங்குவதற்கும், அச்சங்கத்திற்கு தேவைப்படும் பால் குவளைகள், பரிசோதனை உபகரணங்கள் மற்றும் பதிவேடுகள் வாங்க மானியம் ரூ.1 லட்சம் வழங்கப்படவுள்ளதால் தகுதியும், விருப்பமுள்ள மகளிர் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆதிதிராவிட மகளிராக இருத்தல் வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கு குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். சங்க உறுப்பினர் குறைந்தபட்சம் 1 கறவை மாடாவது வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தில் மானியம் பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். மாவட்ட துணைப்பதிவாளரால் (பால் வளம்) மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைக்க உரிய முன்மொழிவு பெற்று 4 மாதத்திற்குள் சங்கத்தை பதிவு செய்ய மாவட்ட துணை பதிவாளரால் (பால் வளம்) நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் பற்றிய முழு விவரங்கள், புகைப்படம், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப ஆண்டு வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், செல்போன் எண் மற்றும் மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தவிர திட்டங்களுக்கு ஏற்றாற் போல் தேவைப்படும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் பெற அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் அறை எண்.225-ல் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம். அலுவலகத்தை 04329228315 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story