ஆதிதிராவிடர் தீவனப்புல் வளர்க்க விதைத்தொகுப்பு பெறலாம்


ஆதிதிராவிடர் தீவனப்புல் வளர்க்க  விதைத்தொகுப்பு  பெறலாம்
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர் தீவனப்புல் வளர்க்க விதைத்தொகுப்பு பெறலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) 2022-2023 -ம் நிதியாண்டிற்கு தாட்கோ திட்டம் மூலம் 900 ஆதிதிராவிடர் மற்றும் 100 பழங்குடியின விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல்லை வளர்க்க ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூபாய் ஆயிரம் மதிப்பில் விதை தொகுப்பு மற்றும் புல்கறணைகள் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படுவதற்கான அரசாணை பெறப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தில் பயன்பெற கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 18 முதல் 65 வயதுக்குட்பட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை பெற மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, மாவட்ட கலெக்டர் அலுவலகம், கள்ளக்குறிச்சி (606-202) என்ற முகவரி அல்லது (04151-2255411) என்ற தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story