ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x

புதிய இணையதளம் வாயிலாக ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகர்


அனைத்து கல்லூரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு புதிய கல்வித்தொகை இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி அனைத்து மாணவர்களும் கல்வி உதவித்தொகை விவரத்தினை இணையதளம் வழியாக பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான இணையதளம் பதிவு கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கப்பட்டது.மாணவர்கள் ஏற்கனவே பெற்ற பழங்குடியினர் சாதி சான்றிதழை பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் எவ்வாறு கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கான வீடியோ காட்சியும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்கும் போது அனைத்து மாணவர்களும் தங்களது வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மாணவர்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டும்.

மாணவர்களும் புதிய கல்வித்தொகை இணையம் வாயிலாக கல்வி உதவித்தொகை பெற உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் அனைத்து கல்லூரி முதல்வர்களும் தங்களது கல்லூரியில் பயிலும் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைய அனைத்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களும் விடுபடாத வகையில் இணையதளத்தில் விண்ணப்பித்து இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story