சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு நடந்தது.
நாகப்பட்டினம்
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு நடந்தது. இதையொட்டி சிங்கார வேலவருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுக கடவுள் சன்னதி, வெளிப்பிரகாரத்தில் உள்ள மேலக்குமாரர் சன்னதி, கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியசுவாமி சன்னதி, தோப்புத்துறை கைலாசநாதர்கோவில், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவில் முருகன் சன்னதி, திருமருகல் வடக்கு வீதியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளிட்ட இடங்களிலும் ஆடிக்கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
Related Tags :
Next Story