தக்காளியுடன் ஆடி மாத சீர்வரிசை


தக்காளியுடன் ஆடி மாத சீர்வரிசை
x
தினத்தந்தி 15 July 2023 12:10 AM IST (Updated: 16 July 2023 12:27 PM IST)
t-max-icont-min-icon

தக்காளி விலை உயர்வை விமர்சிக்கும் வகையில் ஆடி மாத சீர்வரிசையுடன் பெண்ணுக்கு பெற்றோர் சீர்வரிசை வழங்கியது வியப்பை ஏற்பஹடுத்தியது.

வேலூர்

கே.வி.குப்பம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், காமாட்சி அம்மன் பேட்டை, பினாங்குகாரர் என்பவர் வீட்டில் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. புதிதாகத் திருமணமான, ஓராண்டுக்கு உள்ளான, மணப்பெண்ணைத் தாய் வீட்டார் சீர்வரிசை வைத்து மணமகன் இல்லத்திலிருந்து தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம். ஆடி மாதம் முடியும் வரை தாய் வீட்டில் வைத்திருந்து, பிறகு ஒரு நல்லநாள் பார்த்து புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.

அதன்படி, பள்ளிகொண்டாவை சேர்ந்த பெண் வீட்டார் வரும் 17-ந் தேதி ஆடி மாதம் பிறப்பதை முன்னிட்டு, பிறந்தவீட்டு சீர் வரிசையாக ஆப்பிள், அன்னாசிப் பழம், மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றின் வரிசையில் தக்காளிப் பழத்தையும் மதிப்பிற்குரியதாக வைத்து பெண்ணை அழைத்துச் சென்றனர்.

உயர்ரக பழங்களுடன் சீர்வரிசை தட்டில் வைக்கப்படும் அளவிற்கு தக்காளிப்பழம் சீர்வரிசை தட்டில் இடம்பெற்றிருந்தது வியப்பாக இருந்தது.


Next Story