ஆதிபிராமணி பொடிப்பிள்ளை அம்மன் கோவில் திருவிழா


ஆதிபிராமணி பொடிப்பிள்ளை அம்மன் கோவில் திருவிழா
x

ஆறுமுகநேரி பூவரசூர் ஆதிபிராமணி பொடிப்பிள்ளை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி பூவரசூரில் உள்ள ஆதிபிராமணி பொடிப்பிள்ளை அம்மன் மற்றும் இலங்கத்தம்மன் கோவில் ஆவணி கொடை விழா் நடந்தது. முதல் நாளில் கணபதி ஹோமம், மற்றும் இரவு திருவிளக்கு பூஜையும் நடந்து. இரண்டாம் நாளில் அம்மனுக்கு அலங்கார தீபாராதனை பூஜை நடைபெற்றது. மூன்றாம் நாள் சுவாமி குடியழைப்பு பூஜையம் இரவு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

நான்காம் நாள் அம்மன் மஞ்சள் நீராடி கடலுக்குச் சென்று புனித நீர் எடுத்து வந்து ஆறுமுகநேரி காமராஜர் பூங்காவில் அமைந்துள்ள பூமி ஈசுவரர் கோவிலில் கும்பம் ஜோடிக்கப்பட்டு ஊர்வலமாக இரவு 12 மணிக்கு கோவிலை வந்து அடைந்தது. அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஐந்தாம் நாள் ஆறுமுகநேரி சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் இருந்து மேல தாளத்துடன் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். கோவிலில் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. கொடை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story