ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்


ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
x

அரக்கோணம் அருகே ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கீழாந்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அக்னி பிரதிஷ்டை, கலச பூஜை, ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story