ஆதிகேசவ பெருமாள் கோவிலில் விஷு கனி காணும் நிகழ்ச்சி
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் விஷு கனி காணும் நிகழ்ச்சி
திருவட்டார்:
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் விஷு கனி காணும் நிகழ்ச்சி நடந்தது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கேரள முறைப்படி வழிபாடுகள் நடைபெறும். ஆனாலும் தமிழ் புத்தாண்டு நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளிய சாமி முன்பு பழங்கள், காய்கறிகள் படைக்கப்பட்டது. காலை நேர பூஜைக்குப்பின்னர் பக்தர்களுக்கு பிரசாதத்துடன் "கைநீட்டம்" வழங்கப்பட்டது.
அதுபோல் கோவில் வளாகத்தில் உள்ள கிருஷ்ணன் சன்னதி மற்றும் அய்யப்பன் சன்னதியிலும் தனித்தனியாக பழங்கள் படைத்து விஷுக்கனி காணுதல் நடந்தது. நேற்று முன் தினத்தை விட நேற்று பக்தர்கள் அதிக அளவில் வந்து சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்துக்கு பின்னர் வந்த முதலாவது சித்திரை வருடப்பிறப்பு என்பதால் வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து நீண்டவரிசையில் காத்து இருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவட்டார் தளியல் முத்தாரம்மன் கோவிலிலும் நேற்று விஷு கனி காணுதல் நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அர்ச்சகர் பிரசாதத்துடன் கைநீட்டம் வழங்கினார்.