ஆதிபராசக்தி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா
கலவை ஆதிபராசக்தி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஆதிபராசக்தி கல்வியியல் கல்லூரியின் 17-ம் ஆண்டு விழா கல்லூரி முதல்வர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. கல்லூரி வேளாண்மை இயக்குனர் அகத்தியன் முன்னிலை வகித்தார். மாணவி மேனகா வரவேற்றார்.
விழாவில் கல்லூரி செயலாளர் கருணாநிதி, ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரி முதல்வர் முகமது சாதிக், பொறியியல் கல்லூரி முதல்வர் பாலகண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவில் கலைநிகழ்ச்சி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்லூரி இயக்குனர் சதீஷ்குமார், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பவித்ரா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story