சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட கும்பாபிஷேகம்


சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட கும்பாபிஷேகம்
x

சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட கும்பாபிஷேகத்தை மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நடத்தி வைத்தார்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் அடுத்த கொத்தங்குடி ஊராட்சி முத்தையா நகரில், 60-வது ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் புதிதாக கட்டப்பட்டது. இதையடுத்து சக்தி பீட கும்பாபிஷேக கடந்த 2-ந்தேதி குருபூஜையுடன் தொடங்கியது. 3-ந்தேதி கோபுர கலசஸ்தாபிதம் மற்றும் ஆதிபராசக்தி அம்மன் சிலையை அர்த்த மண்டபத்தில் எழுந்தருள செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 4-ந்தேதி சக்தி கொடியை, மாவட்ட தலைவர் கிருபானந்தன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து யாகசாலை பூஜைகள், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக நாளான நேற்று காலை 3-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பீட கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நாயகர் பங்காரு அடிகளார் நடத்தி வைத்தார். தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில், பாண்டியன் எம்.எல்.ஏ., உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story