கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகள் சாதனை


கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகள் சாதனை
x

கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகள் யோகா போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

வேலூர் மாவட்ட யோகா சங்கம் சார்பில், மாநில அளவிலான யோகா கலை போட்டிகள் டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இப் போட்டியில் கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கு பெற்று வெற்றி பெற்றனர். பல்வேறு யோகா கலை பிரிவுகளில் பங்கேற்று அன்னபூரணி, ஜீவபாரதி, சரண்யா, தீபக் ஆகியோர் முதல் பரிசும், ஜெகநாதன், கிரிஜா, நிவேதா, பவித்ராமணி ஆகியோர் இரண்டாம் பரிசும், மோனிஷா, பொற்கொடி, பவித்ரா, நித்திஷ் குமார் ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பரிசும், சான்றிதழும் வழங்கினார். மேலும் சிறந்த கல்லூரிக்கான விருதும் வழங்கப்பட்டது. கல்லூரி பேராசிரியர் சத்தியமூர்த்தி, உடற்கல்வி இயக்குனர் பாலாஜி ஆகியோருக்கு சிறந்த பயிற்சியாளர் விருதும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை கல்லூரி முதல்வர் முகமது சாதிக் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.


Next Story