ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் 75 தேசிய கொடிகளை கையில் ஏந்தி அணிவகுப்பு


ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் 75 தேசிய கொடிகளை கையில் ஏந்தி அணிவகுப்பு
x

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் 75 தேசிய கொடிகளை கையில் ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர், ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 48-ன் மாணவர்கள் ஒன்றிணைந்து 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 தேசிய கொடிகளை கையில் ஏந்தியும், கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தேசிய கொடி வரைந்து வண்ணம் தீட்டியும் மாணவர்கள் சுதந்திர தின உணர்வை பகிர்ந்து கொண்டனர். மேலும், மாணவர்கள் பாரம்பரிய கலைகளான சிலம்பம், யோகா மற்றும் தேசிய பாடல்கள் இசைத்து அசத்தினர்.

பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள், தலைவர்களை பற்றி கலந்துரையாடினர். இதனை தொடர்ந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடு தோறும் தேசிய கொடியேற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்கள் அனைவருக்கும் தேசிய கொடி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இதில், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கவிதா மற்றும் அணியின் மாணவர்கள் செய்து இருந்தனர்.


Next Story