ஆதித்தனார் கல்லூரியில்கலாசார போட்டிகள் தொடக்க விழா


ஆதித்தனார் கல்லூரியில்கலாசார போட்டிகள் தொடக்க விழா
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரியில் கலாசார போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான கலாசார போட்டிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். கல்லூரி அகதர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட்நைட் வரவேற்று பேசினார்.

கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ''மாணவர்கள் தங்களது திறமைகளை கண்டறிந்து அதனை வளர்த்து கொள்வதற்கு இதுபோன்ற கலாசார போட்டிகளில் பங்கேற்க வேண்டும்'' என்று கூறினார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெல்வதற்கான வழிமுறைகளையும் விளக்கி கூறினார்.

விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார். தொடர்ந்து வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரையிலும் கலாசார போட்டிகள் நடைபெறுகிறது.

------


Next Story