சமயநல்லூரில் சீமான் உருவ பொம்மையை எரிக்க முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் கைது

சமயநல்லூரில் சீமான் உருவ பொம்மையை எரிக்க முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் கைது செய்யப்பட்டனர்
வாடிப்பட்டி
ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் சமுதாயத்தை தவறாக பேசியதாக கூறியும், அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும் மதுரை வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக சமயநல்லூர் பஸ் நிறுத்தம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ் குமரன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் செல்வம், சாமிகண்ணு, லட்சுமி, சசிகுமார், மணிகண்டன், சரவணன், செல்லப்பாண்டி, சுரேஷ், அகத்தியன், மணிகண்டன், அதியவன், செல்லப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் சீமான் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனி, கேசவராமச்சந்திரன், தியாகு மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி ஆதித்தமிழர் பேரவையினரை கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு திருமண மண்டபதில் அடைத்து வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.