ஆதித்தமிழர் பேரவையினர் தர்ணா
ஆதித்தமிழர் பேரவையினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில கொள்கை பரப்பு செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் வினோத், துணை செயலாளர் மலவரன், மாநகர செயலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின் போது ஸ்ரீராமபுரம் பேரூராட்சி செட்டியபட்டியில் அருந்ததியினர் வாழும் பகுதியில் பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். மயானத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் கோரிக்கைகள் எழுதப்பட்ட அட்டைகளை கையில் வைத்திருந்தனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
Related Tags :
Next Story